இலங்கையின் 20 மாவட்டங்களுக்கு இரவு 11:30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களுக்கு தீவிர மின்னல் அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 5 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றும் வீசக்கூடும்

மேலும், வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
