நீதித்துறையை அவமதித்து மிதிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர் ஆட்சியாளர்கள்: சஜித் குற்றச்சாட்டு (photos)
சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை இணைந்து செயற்பட்டாலும், நாட்டில் தற்போது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமே ஆட்சி முறையில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மஹர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத் தீர்ப்புகளைக் சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அரசமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்குக் சவால் விடுக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம்
தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது, சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவிடம் கோரினார்.
தற்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மறைத்து வருகின்றார்.
தனது பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் அவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மக்கள் விரோத, மக்கள் எதிர்ப்பு, ஒடுக்குமுறைசார் இந்த அரசாங்கம், வரி விதித்து, பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் கையில் இருக்கும் கடைசி விலங்கைக் கூட பறித்து, பொருளாதாரத்தைச் சுருக்கி வருவதையே செயற்படுத்தி வருகின்றது.
பொருளாதாரத்தை விருத்தி செய்து, மக்களின் கைகளில் பணம் செல்வதற்கான வழிகளை உருவாக்குவதும்தான் நடக்க வேண்டிய செயற்பாடு.
பணவீக்கம்
கேள்வியைக் குறைப்பதற்காக இந்த வரிச் சுழற்சியை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.
இதனால் பணவீக்கம் குறைவடைந்து நாடு இயல்பு நிலைக்கு மீளும் என நினைத்தாலும் அது உண்மையில் தவறான செயல்.
நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் அது ராஜபக்ச குடும்பத்துக்கோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கோ அது பிரச்சினையாக அமையாது.
220 இலட்சம் மக்களுக்குமே அது பிரச்சினையாக அமைகின்றது. நாட்டில் அரசால் செய்ய முடியாத பல விடயங்களை கடந்த 3 ஆண்டுகளில், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி சாதித்துள்ளது.
வெறும் பேச்சுக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல், செயற்படுவதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் இயல்பு. எனவே, மீண்டும் ஏமாறுவதை விட்டுவிட்டு உண்மையான பதிலைத் தேடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
