உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07.09.2023) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்கள இணையத்தளம்
குறித்த விண்ணப்ப படிவத்தை பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவிருக்கும் கடந்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி

இதேவேளை, வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியாண்டு 2022/23 இற்கான பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri