வெடுக்குநாறி மலையில் சிலை வைக்க மீண்டும் தடை ஏற்படுத்திய பொலிஸார்(Photos)
வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஷ்ட்டை செய்யும் நிகழ்விற்கு பொலிஸார் மற்றும் தொல்பொருட் திணைக்களத்தினர் இன்றைய தினமும் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஷ்ட்டை செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவு வழங்கியிருந்தது.
இதனையடுத்து இன்றையதினம் காலை ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்ட்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தொல்பொருள் திணைக்களம்
குறித்த செயற்பாட்டினை கண்காணிக்கும் நோக்குடன் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் ஆலய வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் விக்கிரகங்கள் பிரதிஷ்ட்டை செய்யும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு தடையை ஏற்படுத்தும் நோக்குடன், புதிய விக்கிரகங்களை வைக்க வேண்டாம் என்றும் ஏற்கனவே இருந்த விக்கிரகங்களையே மீள வைக்குமாறு பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட ஆலயத்தரப்பினர், முன்னர் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளது.
உடைந்த சிலைகளை மீண்டும் எப்படி வைக்க முடியும், எமது சமய வளக்கத்தின் படி அது முறையான செயற்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் சற்றுநேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.
எனினும் சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அனைத்து விக்கிரகங்களும் வைக்கப்பட்டது.
ஆலய சூழலில் பாதணி
இதேவேளை இன்றையதினம் ஆலய வளாகத்திற்கு வருகைதந்த பொலிஸார் மற்றும் தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் தமது பாதணிகளை களற்றாது ஆலய சூழலிற்குள் நின்றனர்.
இதனால் விசனமடைந்த பொதுமக்கள் உயர் பொறுப்புக்களில் உள்ள அரச அதிகாரிகள் சமய
விடயங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருந்தமைக்கு தமது எதிர்ப்பினை
தெரிவித்திருந்தனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
