கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு தொல்லியல் திணைக்களம் தடை! குருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என தெரிவிப்பு

of villagers
By Independent Writer Mar 02, 2021 04:40 PM GMT
Report

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி பொலிஸார் மற்றும் வனவள திணைக்களத்தினரை ஏவிவிட்டு வேலைகளுக்குத் தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியைச் சமப்படுத்தும் வேலைகளில் குறித்த காணி உரிமையாளர் நேற்றையதினம் ஈடுபட்டிருந்தார்.

அவ்வேளை அவ்விடத்துக்கு வருகை தந்த பௌத்த தேரர் ஒருவர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இவ்விடம் அனைத்தும் குருந்தூர் மலைக்குச் சொந்தமான தொல்லியல் புராதன பூமி எனத் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு 500 ஏக்கர் நிலங்கள் புராதன பூமி, இங்கு இந்த வேலைகளிலும் ஈடுபட முடியாது, இங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளதோடு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் வனதிணைக்களத்தினரை அழைத்துக் காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காணியை மேற்கொண்டு துப்பரவு செய்யமுடியாது எனத் தெரிவித்து தடை விதித்துச் சென்றுள்ளதோடு காணி உரிமையாளரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பத்திரிகையாளர்களை தொடர்புகொண்ட கிராம மக்கள் இவ்வாறான விடயம் நடைபெறுகின்றது என அழைத்த காரணத்தால் அங்கு செய்தி அறிக்கையிடலுக்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவரின் ஊடக அடையாள அட்டையை வாங்கிய பொலிஸார் அதிலுள்ள விபரங்களைப் பதிவு செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசம் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாகக் குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த பிரதேசம் என்பதோடு போருக்குப் பின்னர் மீண்டும் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளைத் துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த காணிகளில் வேலிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கிளிசறியா மரங்கள் நடப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளதும், மக்களின் காணிகளில் மா, பலா, தென்னை போன்ற மரங்கள் கூட இன்றும் நிற்பதைக் காணமுடிகின்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் திகதியிலிருந்து குருந்தூர் மலையில் இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அதனை அண்டிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான குடியிருந்த நிலங்கள், விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கமாக இன்று இந்த நடவடிக்கையில் பௌத்ததேரர் தலைமையிலானோர் ஈடுபட்டுள்ளமை கிராம மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US