அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு டென்மார்க் கடும் அதிருப்தி
கிரீன்லாந்துக்கு சிறப்பு தூதுவராக லூசியானா மாகாண ஆளுநர் ஜெஃப் லேண்ட்ரியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்தமைக்கு டென்மார்க் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
டென்மார்க் அரசு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோர உள்ளதாக அறிவித்துள்ளது.
கிரீன்லாந்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்பதை ஜெஃப் புரிந்து கொண்டுள்ளார் எனவும் அவர் நமது நாட்டின் நலன்களை வலுவாக முன்னேற்றுவார் எனவும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
கடும் அதிருப்தி
கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக்கும் இந்த தன்னார்வப் பணியில் இணைவது கௌரவம் என லேண்ட்ரி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கருத்து டென்மார்க் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நியமனம் என்னை ஆழ்ந்த கோபப்படுத்தியுள்ளது. குறிப்பாக லேண்ட்ரியின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசன் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விரைவில் அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கேட்பதாக அறிவித்தார்.
தேசிய பாதுகாப்பு
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரெட்ரிக் நீல்சன் இணைந்த அறிக்கையில், "தேசிய எல்லைகளும் இறையாண்மையும் சர்வதேச சட்டத்தில் வேரூன்றியவை. வேறு நாட்டை இணைத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தனர்.
"கிரீன்லாந்து கிரீன்லாந்தர்களுக்கே உரியது. அமெரிக்கா அதை கைப்பற்ற முடியாது" என்றும் வலியுறுத்தினர். கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் தன்னாட்சி பகுதி ஆகும். ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் பெருமளவு சுயாட்சி உள்ளது.

வளமான கனிம வளங்கள் மற்றும் ஆர்க்டிக் பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களால் இது தேவை என்றும், தேவைப்பட்டால் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan