சட்டவிரோத குடியேறிகளுக்கான ஊக்கத் தொகையை மூன்று மடங்காக உயர்த்திய ட்ரம்ப்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளுக்கு, சுயமாக நாடு கடத்தல் (self-deport) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை செயலகம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு இலவச விமான டிக்கெட் உட்பட உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள்
சட்டவிரோத குடியேறிகள் இந்த சலுகையை பயன்படுத்தி சுயமாக நாடு கடத்தலில் ஈடுபட வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்து, அவர்கள் ஒருபோதும் திரும்ப வர முடியாத வகையில் நாடு கடத்துவோம் என உள்துறை செயலாளர் கிறிஸ்டி நோம் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் ட்ரம்ப் அரசு அறிமுகப்படுத்திய சீபிபீ ஹோம் செயலி மூலம் சுய நாடு கடத்தல் எளிதாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயலி, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் சீபிபீ வன் என்ற பெயரில் புலம்பெயர்ந்தோர் சட்டப்பூர்வமாக நுழைய உதவியது.
ட்ரம்ப் அரசாங்கம்
ஒரு நபரை கைது செய்து, தடுப்புக்காவலில் வைத்து நாடு கடத்த சராசரியாக 17,000 டாலர்கள் செலவிட நேரிட்டுள்ளதாக உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் வரி செலுத்துவோரின் செலவைக் குறைக்கும் என ட்ரம்ப் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடு கடத்துவோம் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சுயமாக வெளியேறியுள்ளனர்.
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam