அநுர அரசிற்கு ஏற்பட்ட பெரும் தோல்வி
ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி கொழும்பு மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இன்று(2025.12.22) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
முதல் வரவு செலவுத் திட்டம்
இதனால் 3 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தியின் முதல் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள்சக்தி தனிப்பெரும் கட்சியாக வென்ற போதிலும், பெரும்பான்மை இல்லாததால் சிறு குழுக்களின் ஆதரவுடன் சபையை கட்டுப்படுத்தி வந்தது.
எனினும், கூட்டு எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்டத்திற்குஎதிராக வாக்களித்ததால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது.
அரசியல் பின்னடைவு
இது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அரசியல் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதேவேளை,, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வ்ரே காலி பல்தசார் இந்த ஆண்டு ஜூன் மாதம் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் கொழும்பு மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
அப்போது அவர் 61 வாக்குகளைப் பெற்றார். ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரிசா சரூக் 54 வாக்குகளைப் பெற்றார். கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தில் இந்த வரவு செலவுத் திட்டத் தோல்வி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்- அமல்
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam