பிரித்தானிய புலம்பெயர் கொள்கையில் கடுமையான விதிகள்.. எடுக்கப்படவுள்ள திடீர் தீர்மானம்
ஐரோப்பாவில் மிகவும் கடுமையான ஒன்றாகக் கருதப்படும் டேனிஷ் முறையை மாதிரியாகக் கொண்ட பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம், டென்மார்க்கின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் புகலிடக் கொள்கைகளை ஆய்வு செய்ய பிரித்தானிய அதிகாரிகள் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.
குடும்ப மறு இணைப்புகள் மற்றும் சில அகதிகளை தற்காலிகமாக தங்குவதற்கு கட்டுப்படுத்துவது தொடர்பான டென்மார்க்கின் இறுக்கமான விதிகள் ஆகியவை பரிசீலிக்கப்படும் கொள்கைகளில் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
டேனிஷ் முறை
அதற்கமைய, இந்த மாத இறுதியில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த புகலிடக் கொள்கை ஆபத்தான ஒன்றாக மாறும் என அந்நாட்டில் பலர் எச்சரித்து வரும் நிலையிலும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
டென்மார்க்கில், வெளிநாட்டு ஆட்சியால் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்ட அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதே நேரத்தில் மோதல்களில் இருந்து தப்பிச் செல்பவர்கள் பொதுவாக தற்காலிக அடிப்படையில் மட்டுமே நாட்டில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பான நாடு எது என்பதை டென்மார்க்கே தீர்மானிக்கிறது.
வதிவிட அனுமதிகள்
2022ஆம் ஆண்டில், சிரியாவின் டமாஸ்கஸிலிருந்து சுமார் 1,200 அகதிகளின் வதிவிட அனுமதிகள் புதுப்பிக்கப்படாது என்று டேனிஷ் அரசாங்கம் அறிவித்தது.

ஏனெனில், ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக் கொண்டு, அகதிகள் திரும்பி வருவதற்கு அந்தப் பகுதி பாதுகாப்பானது என்று அது தீர்மானித்தது.
குடும்ப மறு இணைப்புகளுக்கான டென்மார்க்கின் இறுக்கமான விதிகள் பிரித்தானிய உள்துறை அலுவலக அதிகாரிகளையும் கவர்ந்துள்ளன. வதிவிட உரிமைகள் வழங்கப்பட்ட ஒரு அகதி தனது துணைவியார் தங்களுடன் சேர விரும்பினால், பூர்த்தி செய்யப்பட வேண்டிய பல வரம்புகள் உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam