புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே கோட்டாபயவிற்கு விசா வழங்க முக்கிய நாடுகள் மறுப்பு - நிமலன் விஸ்வநாதன்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான டொலர்களைக் கொண்டு வருவதற்கு புலம்பெயர் மக்கள் தயாராக இருப்பதாக இலங்கை புலம்பெயர் அமைப்பின் தலைவர் நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கடனில் இருந்து விடுபட தேவையான முழுத் தொகையையும் இலங்கை கொண்டு வர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இணைய ஊடகம் ஒன்றிடம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
புலம்பெயர் இலங்கையர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணைந்து செயற்பட்டிருந்தால் நாட்டை அபிவிருத்தி செய்திருக்க முடியும். எனினும் அவர் அதனை செய்ய தவறிவிட்டார். அவ்வாறு செய்திருந்தார் மீதமுள்ள காலப்பகுதயிலும் அவர் தனது பதவியை தொடர்ந்திருக்க முடியும்.
கோட்டாபயவினால் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது
புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தம் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு முன்னணி நாடுகள் விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளன. கோட்டாபயவிற்கு விசா வழங்க மறுப்பு தெரிவித்தமைக்கு புலம்பெயல் இலங்கையர்களின் பகுதியளவாக அழுத்தம் இருந்தது.
அவரால் எந்த நாட்டிற்கும் செல்ல முடியது. மீளவும் இலங்கைக்கே திரும்பி வரவேண்டும். விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிதி மற்றும் தமிழீழ வைப்பகத்தில் இருந்த பெரும்தொகை தங்கம் என்பன மகிந்த ராஜபக்சவினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
புலம்பெயல் இலங்கையர்களிடம் இருந்து நாட்டிற்கு டொலர்களை கொண்டுவர முடியும். எனினும் அவ்வாறு கொண்டுவரப்படும் நிதிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
