நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி! சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது
இலங்கைக்கு பசளை வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.
இதன்படி, நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என்று சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை குறித்த சீன நிறுவனம் அதிகாரிளுக்கு வழங்கியுள்ளது.
அமைச்சரின் கோரிக்கை

சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம் விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், சீன பசளை நிறுவனம் அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டாலும் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் நடத்தி வருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முடிந்தால் நிராகரிக்கப்பட்ட சேதன பசளைக்கு பதிலாக யூரியா பசளை கப்பல் ஒன்றை வழங்க முடியுமா என அமைச்சர் வினவியதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri