நுளம்பு பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்த ஏழுபேருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 வீட்டு உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் அண்மைக்காலமாக அதிகளவில் ஆட்கொல்லி நோயான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சுற்றாடலை நுளம்பு பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாது தொடர்ச்சியாக நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த உரிமையாளர்கள் 07 பேர், கொக்குவில் பொது சுகாதார பரசோதகரின் பரிசோதனையில் சிக்கி கொண்டனர்.
20,000 ரூபா தண்டப்பணம்
இவர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியே வழக்குகள் கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகள் நேற்று (07.02.2024) வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
குற்றம்சுமத்தப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொண்டதையடுத்து 07 பேரிற்கும் 20,000 ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவு விதிக்கப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் நீதிமன்றால் வழங்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam