யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய்த் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழைக்கு பின்னர் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 165 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (27.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விழிப்புணர்வு செயற்பாடுகள்
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினங்களாக திங்கள், செவ்வாய் ஆகிய தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்கு நோயின் தாக்கம் பற்றி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam
