நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை 1,382 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
அத்தோடு , கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த காலகட்டத்தில் இருவர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்களும் 24 டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam