நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில், அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய்
அத்துடன் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 1,453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் தமது சுற்றுசூழலை டெங்கு பரவல் ஏற்படாத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் டெங்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan