மட்டக்களப்பில் தீவிரமடையும் டெங்கு நோய்! இருவர் பலி - 231பேர் பாதிப்பு (PHOTOS)
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருகிறது.
மட்டக்களப்பில் பரவும் டெங்கு
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஒரு மாத காலத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், 231பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்புகளை அழிக்கவென கிணறுகளில் மீன்குஞ்சுகளை இடும் நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் இன்று மேற்கொண்டுள்ளனர்.
கிணறுகளில் மீன்குஞ்சுகளை இடும் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூகுள் வலையமைப்பினூடாக கிணறுகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. மாமாங்கம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் விடுவதற்கான மீன்குஞ்சுகளும் (08) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் இ.உதயகுமார், மாமாங்கம் பங்குத்தந்தை அருட்தந்தை பிறைனர் செலர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.விஜயகுமார், மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கிசாந்தராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
