கொழும்பு மக்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் 41,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன் 25 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இருந்து பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்
தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதோடு 67 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், டெங்கு பெருகும் அபாயம் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |