கொழும்பு மக்களுக்கு வரும் மற்றுமொரு ஆபத்து..! டெங்கு நோயால் 19 பேர் உயிரிழப்பு
டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 35,000 ஐக் கடந்துள்ளது.
அத்துடன், டெங்கு நோயாளர்களின் உயிரிழப்பு 19-ஆக பதிவாகியுள்ளது.
கொழும்பு மக்களுக்கான எச்சரிக்கை
இந்த ஆபத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜூன் 08, 09 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாகும் டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர், அதாவது 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதுடன், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே முறையே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.