காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 44,480ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு தொடர்பான மரணங்கள்
இதுவரை டெங்கு தொடர்பான 28 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு கூறியுள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு நுளம்பு ஒழிப்புத் திட்டம் இன்றும் (20.06.2026) தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.