இலங்கையில் ஆபத்தான சூழ்நிலை! ஒரே நாளில் பதிவான ஆயிரக்கணக்கான நோயாளர்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037ஆக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. சாதாரணமாக நாட்டில் நாளாந்தம் 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்களே பதிவாகுகின்றனர்.
நோயாளர்களின் எண்ணிக்கை
தற்போதைய ஆபத்தான சூழ்நிலையுடன் அண்மைய நாட்களாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்துள்ளது.

இந்த சூழலிலேயே நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.
நோயாளர்கள் அதிகரித்து வருவதனால், இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வைத்தியர் கபில கன்னங்கர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri