ஒவ்வொரு வாரமும் 30 - 45 நிமிடங்கள் கட்டாயமாகும் நடைமுறை: பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு
பொதுமக்களும், நிறுவனங்களும் ஒவ்வொரு வாரமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தங்கள் வசிப்பிடங்களைச் சுத்தம் செய்ய ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் செயல்திறன் மிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நடவடிக்கைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அமைப்புகள் பெயரளவிற்கு மட்டும் செயல்படாமல், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தும்.
தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் - இன்று வெளிவரப்போகும் முக்கிய விடயம்
இக்குழுக்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அலுவலக வளாகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும்.
மாவட்டங்கள் முழுவதும் நோய் தடுப்பு முயற்சிகளை தொடர்வதற்காக, உள்ளூராட்சிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும். பொதுமக்களும் நிறுவனங்களும் ஒவ்வொரு வாரமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தங்கள் வசிப்பிடங்களைச் சுத்தம் செய்ய ஒதுக்க வேண்டும்.

நோயை தடுத்தல்
நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதை விட, இந்த நேரத்தில் நோயைத் தடுப்பதே நமது மிக முக்கியமான தேவையாகும்.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் ஏற்கனவே நெருக்கடியில் இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.
மேலும், ஒருங்கிணைந்த சமூக மற்றும் நிறுவன முயற்சிகள் மூலம் நோய்ப் பரவலைக் குறைக்கும் நோக்கில், மற்ற மாவட்டங்களிலும் இதேபோன்ற குழுக்கள் நியமிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 23 மணி நேரம் முன்
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri