மக்களுக்கு அவசர அறிவிப்பு! உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான வானிலையால் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த நிலையிலேயே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு நாட்டில் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், வைத்தியரிடம் சிகிச்சை பெற தாமதிக்க வேண்டாம் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |