மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo)

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Jun 04, 2022 07:35 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பெரியகல்லாறு பகுதியில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo) | Dengue Eradication Program Batticaloa District

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சா.இராஜேந்திராவின் வழிகாட்டலின் கீழ், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரனின் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

டெங்கு நோயை ஒழிப்பதற்கான அறிவுறுத்தல்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo) | Dengue Eradication Program Batticaloa District

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo) | Dengue Eradication Program Batticaloa District

இதன்போது நுளம்பு பெருகும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

நுளம்பு பெருகும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்தோர் எச்சரிக்கப்பட்டதுடன் அவற்றினை தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக டெங்கு தாக்கம் தொடர்பான அறிவுறுத்தல்களும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியம் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo) | Dengue Eradication Program Batticaloa District

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (4) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நோய் தொடர்பான ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாக காணப்பட்டுள்ளது.

வைத்தியரின் கோரிக்கை

இதனால், தங்களது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நியாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ சி.எம் பஸாலின் அறிவுறுத்தலில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo) | Dengue Eradication Program Batticaloa District

இதற்கமைய, வீடு வீடாக சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் பரிசோதனையின் போது, நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டதோடு தங்களது வீட்டையும் அதனை சூழவுள்ள இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும், எதிர்வரும் மழை காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதுடன் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தங்கள் வீட்டுச் சூழலை சுத்தம் செய்வதோடு தங்கள் வீடுகளில் காணப்படும் நுளம்புகள் பெருவதற்கு ஏதுவான பொருட்களை அழிக்குமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான பணியாளர் குழு மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US