மன்னார் - பேசாலையில் டெங்கு தொற்றாளர் ஒருவர் அடையாளம்! - வைத்தியர் ரி.வினோதன்
மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரே டெங்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி டெங்கு தொற்றிற்கு உள்ளாகியமை தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நீண்ட காலத்தின் பின்னர் மன்னார் மாவட்டத்தில் புதிதாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேசாலை பகுதியில் உள்ள குறித்த சிறுமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மன்னார் மாவட்ட தொற்று நோய்த்தடுப்பு பிரிவினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு பேசாலையிலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் புகையூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.













அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
