யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
பருவ மழையினை அடுத்து யாழில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக, யாழில்.டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது.
கடந்த ஆண்டில் 09 பேர் டெங்கு காய்ச்சலினால் யாழில் உயிரிழந்திருந்துள்ளனர்.
சிவப்பு அறிவித்தல்
இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது , ஆயிரத்து 505 குடியிருப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதன்போது 74 குடியிருப்புக்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டுள்ளன. அதில் 65 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் , 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 111
குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , அவர்களுக்கு சிவப்பு
அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
