அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை : அபாய வலயமாக இனங்காணப்பட்டுள்ள மாவட்டம்
இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 16 நாட்களில் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவானதை அடுத்தே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் அதிகபட்சமாக 21.32 சதவீதமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
டெங்கு அபாயம்
இதேவேளை, டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96% அதாவது 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.
டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்துத் தங்கள் சூழலைத் தூய்மையாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
அதிரடியாக கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்..! மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற அனுமதி