டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி சிறுவர்கள் குறித்து வெளியான அறிவிப்பு
தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்கள் அணிவதை உறுதி செய்யுமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய குழந்தைப்பருவ வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் விடுதலைப் புலிகள் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை
எதிர்வரும் இரண்டு வாரங்கள்
டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து முன்பள்ளிகளுக்கு வரலாம் என கல்வி அமைச்சகம் சமீபத்தில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்புக் கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
முன்பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக்கூடிய நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். நுளம்பு கடியியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் நான் அனைத்து பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடி பாடசாலைகளுக்குள்ளும் காணப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.