மானிப்பாய் பொதுச்சந்தையில் டெங்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு (Photos)
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தின் முதலாவது டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றையதினம் (20) மானிப்பாய் பொதுச்சந்தையில் முன்னெடுக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகி டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து எஸ்.ரி.குமரனின் நெறிப்படுத்தலில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான வீதி நாடகம் நடாத்தப்பட்டது.
பின்னர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் வடக்கின் பிரதம செயலாளருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்ட பின் சந்தையைச் சுற்றிய வளாகத்தினை சுத்தப்படுத்தியதுடன் குறித்த நிகழ்வு நிறைவிற்கு வந்தது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபனேசனின்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாணத்தின் பிரதம
செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, சிறப்பு அதிதிகளாக வட மாகாண உள்ளூராட்சி
ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன், யாழ். பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
மு.சுலோச்சனா, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிந்துஷா, வலி.
தென்மேற்கு சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.










CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்... விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
