காய்ச்சல் இருந்தால் உடன் வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்
மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தம்மிகா ஜெயலத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும்.
இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
செயலணி நியமனம்
அத்துடன் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ.கலுகபுஆரச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
