நோன்பு காலங்களில் சமைப்பதற்கு கூட சமையல் எரிவாயு இல்லை : மக்கள் போராட்டம் (Photos)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் சமையல் எரிவாயு பெற்றுத் தருமாறு கோரி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.
காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் சமையல் எரிவாயு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாடிக்கையாளர்கள் திருகோணமலை நகரின் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை ஒட்டி இவ்வாறு சமையல் எரிவாயு உட்பட ஏனைய பொருட்களுக்கும் வரிசையில் காத்திருந்து பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோன்பு காலங்களில் சமைப்பதற்கு கூட மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இல்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் மக்கள் வீதி நடுவிலிருந்து இன்றைய நோன்பினை திறந்தமையும் குறிப்பிடத்தக்கது.



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri