வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது:நிமல் சிறிபால டி சில்வா
வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலமோ அல்லது அரசியல் திட்டங்கள் மூலமோ அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் இல்லாத மாற்றங்களில் பயனில்லை

இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுகம் மற்றும் கடல்சார் கல்லூரியில் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த ஊழியர்கள் 35 பேருக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
பெறுபேறுகள் இல்லாத பொய்யான அமைப்பு ரீதியான மாற்றங்களில் பலனில்லை. இளைய தலைமுறையினரை அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பலப்படுத்துவதன் மூலமே அமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
பொருளாதாரம் இல்லாத அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு செல்வதை விட யதார்த்த ரீதியாக காணும் உண்மையான அமைப்பு ரீதியான மாற்றத்திற்கு குரல் கொடுக்குமாறு கோட்டுக்கொள்கிறேன்.
துறைமுக அதிகார சபையில் சம்பிரதாயபூர்வமான முறைமையை மாற்றினேன்

துறைமுக அதிகார சபையில் இருந்து வரை இருந்து வந்த சம்பிரதாயபூர்வமான அமைப்பு முறைமையை நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மாற்றினேன்.
துறைமுகத்தின் பதவிகளுக்கு எனது உறவினர்களையோ அரசியல் ஆதரவாளர்களையோ நியமிக்கவில்லை.
துறைசார்ந்த நபர்களையே துறைமுக அதிகார சபைக்கு நியமித்தேன் எனவும் அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.