ஹட்டன் போடைஸ் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
ஹட்டன் போடைஸ் தோட்ட மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஹட்டன் - டயகம பிரதான வீதியில் அமைந்துள்ள தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
அந்த தோட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து என்பீல்ட் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டத்திற்குப் பயண தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று காலை பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து போடைஸ் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
எனவே கடந்த பல நாட்களாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாம் தோட்ட தொழிலையும் இழந்து வருமானமில்லாது அவதிப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் மேற்படி பிரச்சினைகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துபேசி தீர்வை பெற்றுத் தருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஒன்று கூட முடியாது எனவும் பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.
இதேவேளை இன்ஜஸ்ரி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஹொன்சி நகரம் புளியாவத்த, பேன்போட் ஆகிய தோட்ட பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்ஜஸ்ரி, பிலிங்போனி ஆகிய தோட்டங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
