கந்தளாய் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பசளையைப் பெற்றுத்தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கந்தளாய் விவசாயிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பேராற்றுவெளி விவசாய நிலத்திலிருந்து விவசாயிகள் இன்றைய தினம்(11) இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கந்தளாய் நீர்ப்பாசன திட்டத்தினூடாக விவசாயம் மேற்கொள்ளும் 46 விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கம் விவசாயிகளுக்குப் பசளையைப் பெற்றுத்தர வேண்டும், அரசு மேற்கொள்ளும் விவசாய திட்டங்கள் அனைத்தும் மக்களையும் பொது மக்களையும் அசௌகரியத்திற்கு உட்படுத்தும் செயற்பாடாகும் எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
