பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை முன்பாக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஆராப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து, குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளுக்கான பசளை தட்டுப்பாடு, அரசியல் கைதிகளின் விடுதலை , பேர்ள் கப்பல் விபத்தினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிப்பு, தமிழர்களின் காணி விடுவிப்பு போன்றவற்றினை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
முன்னதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச சபை உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் ஒன்று திரண்டு எரிபொருள் விலையேற்றத்தினை வெளிப்படுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டியில் தங்களுடைய பயணத்தினை ஆரம்பித்து கோஷங்கள் எழுப்பியவாறு வலி தென்மேற்கு பிரதேச சபை வரைக்கும் பேரணியாக வந்தனர்.
அங்கு ஒன்றுகூடிய வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
