கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பௌத்த மதகுருமாரின் இணைவில் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கறுப்பு ஆடைகளை அணிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கறுப்பு ஞாயிறு’ தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam