கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
ஊடக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்கா முன் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.
ஊழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது.
குறித்த ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேசமே பதில் சொல், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியராளர எங்கே?படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடு போன்ற கோசங்களை எழுப்பியுள்ளனர்.











தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
