மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதாரத்துறை ஊழியர்களால் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று (22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்க வேண்டும், கடமைக்கு சமூகமளிக்காத இடையூறுகள் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த போராட்டம் நண்பகல் 12மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
