மட்டக்களப்பில் மார்ச் 12 இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பதாதைகைள் காட்சிப்படுத்தும் நிகழ்வு
மட்டக்களப்பில் தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் தூய அரசியலுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாதைகைளை பொது இடங்களில் காட்சிப்படுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்ட மார்ச் 12 இயக்கமானது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு தூய அரசியலுக்காக அரசியல் ஆட்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் "தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் " எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு பதாகையினை பொது இடங்களில் காட்சி படுத்தும் செயற்றிட்டத்தினை மாவட்ட ரீதியாக இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துப் பகிர்வு நிகழ்வு
அதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு நேற்று (12.03.2024) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றுள்ளது.
மார்ச் 12 இயக்கம் இணைப்பாளர் சபா.சிவயோகநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக இடம் பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து தூய அரசியலுக்காக அரசியல்வாதிகள் எனும் கருப்பொருளிற்கு அமைவாக கருத்துப் பகிர்வு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குற்றச்செயலுக்காக தண்டிக்கபட்டவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், அதனைப் பிறர் பயன்படுத்துவதற்காகத் தூண்டுபவர்கள் போன்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடாது, பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத்தக்க வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு விடயங்களை மார்ச் 12 இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |