இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம்(23.10.2024) திகதி எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
விசைப்படகு சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம்
இதற்கமைய தமிழ்நாடு - ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக விசைப்படகு சங்கத்தினரால் நேற்று (25.10.2024) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam