திருகோணமலை கப்பல் துறை பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
குறித்த போராட்டமானது இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் அல்அக்சா ஜூம் ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இருந்து அஷ்ரப் நகர் வயல் வீதி வரை பேரணியாக சென்றனர்.
காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள்
"வேண்டாம் வேண்டாம் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வேண்டாம், எங்களுடைய விவசாய காணிகள் எங்களுக்கு வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையினர் தங்கள் பகுதிக்குள் வந்து விவசாயம் செய்ய விடாது தடுத்து நிறுத்துவதுடன் குடியிருப்புக்களை அகற்றுமாறும் வற்புறுத்துவதாக தெரிவிக்கின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கப்பல் துறை கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட ஜீவனோபாயமாக கடற்றொழில் ,விவசாயத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்போதைய கப்பல் துறை ,துறை முகங்கள் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக செயற்பட்ட மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் ஆல் மக்கள் மீள் குடியேற்றப்பட்டார்கள் என்பதுடன் குறித்த அமைச்சரால் 1995 பங்குனி மாதம் 04ம் திகதி குறித்த கிராமத்தில் உப தபால் கந்தோர்,வாசிகசாலை, கிராம அதிகாரி ,சனசமூக நிலைய கட்டிடத் தொகுதியும் திறந்து வைக்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருவதுடன் மக்கள் சேவையும் இடம்பெற்று வருகிறது.
மேலும் இப்பிரதேச மக்களின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வாழ வைக்குமாறும் இதன்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
