உடபுஸல்லாவையில் தொடருந்து நிலைய விடுதியை தனியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
நுவரெலியா மாவட்டம் உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் ராகலை புருக்சைட் பகுதியில் காணப்படும் தொடருந்து நிலையத்திற்கு சொந்தமான பழமையான விடுதியினை தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(14.06.2024)அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மதகுருவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பவனையற்ற இடம்
இது ஆரம்பத்தில் சேவையிலிருந்த தொடருந்து நிலைய விடுதி எனவும் அந்த பகுதிக்கு செல்லும் தொடருந்து சேவை 1948 ஆம் காலப்பகுதிக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டாலும் அந்த விடுதி பவனையற்ற இடமாகவே காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் இந்த இடத்தை பாடசாலை காரியாலயம், கிராம உத்தியோகத்தர் காரியாலயம், அறநெறி பாடசாலை, மற்றும் ஏனைய பொது சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுகோள் விடுத்து வழங்காத அதிகாரிகள் தற்போது தனி ஒருவருக்கு வழங்கியமையினாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுதியில் மதுபான சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தடுத்து பொது வேலைகளுக்கு பயன்படுத்த ஆவணம் செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக செயலாளரும் முன்னாள் வலப்பனை பிரதேச சபை உறுப்பினருமான தமிழ்மாறன் ஜனார்த்தனும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |