வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்கு முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை வவுனியா ஊடக அமையத்தினர் எதிர்வரும் சனிக்கிழமை (02.12) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கவுள்ளனர் .
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர்கள் இன்று (30.11.2023) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பழிவாங்கும் செயற்பாடுகள்
“யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாடுகளும் அரச இயந்திரங்களான பொலிஸாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினராலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு-கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், வவுனியாவில் செய்தி சேகரில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர் ஒருவர் மீது பொலிஸாரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரியும் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் ” என வவுனியா ஊடக அமையத்தினர் கோரியுள்ளனர்.

வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
