அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்க ஜனநாயகக் கட்சியினர் தீவிரம்
ஈரானுடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் "வசந்த கால விடுமுறைக்காக" தலைநகரை விட்டு வெளியேறியிருப்பது இரு தரப்பு அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு ஒரு இக்கட்டான போர்ச் சூழலில் இருக்கும்போது, சட்டமியற்றுபவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த திங்கட்கிழமையன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் "முழு நாகரிகத்தையும்" அழித்துவிடுவேன் என்று விடுத்த எச்சரிக்கை காட்டுத்தீயாய் பரவியது.
25வது திருத்தச் சட்டம்
இதனால் ஆத்திரமடைந்த ஜனநாயகக் கட்சியினர், ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கும் 25வது திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி தன்னிச்சையாகப் போர் தொடுப்பதைக் கட்டுப்படுத்த, நாடாளுமன்றத்திற்கு இருக்கும் முக்கிய ஆயுதம் 'போர் அதிகாரச் சட்டம்' ஆகும்.
இந்த சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர முடியாது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது படையெடுத்ததாக ட்ரம்ப் அறிவித்தபோது,
இந்த அதிகாரக் கட்டுப்பாடு தீர்மானம் தோல்வியடைந்தது. இருப்பினும், இன்றைய தினம் ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் ஒருமுறை அடையாளப் பூர்வமாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளனர்.
இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், போரை நிறுத்த விரும்பும் அமெரிக்க மக்களுக்கு இது ஒரு சிறு நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுத்தமாக பின்வாங்கிய விஜய் டிவி, மொத்தமாக கைப்பற்றிய சன் டிவி சீரியல்கள்... டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் Cineulagam
இந்த வார விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங்.. எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது தெரியுமா? Cineulagam