தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் ஜனநாயகத் தமிழரசு கூட்டு
ஜனநாயகத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளன என ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இன்று பல கட்சிகள் இணைந்துள்ளன.
கோரிக்கை
அதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வழிநடத்தலில் ஜனநாயகத் தமிழரசுக் கட்சி இந்தக் கூட்டணியில் இணைந்து எமது தமிழ் மக்களின் தீர்வுக்காகவும், மக்களின் அடிப்படைத் தேவை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முகமாகவும் செயற்படவுள்ளது.
இந்த நோக்கத்துக்காக ஏனைய கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றோம்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களுக்குப் பழக்கப்பட்ட சின்னம் என்பதன் அடிப்படையிலும் மக்களுக்குக் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்ற காரணத்தின் அடிப்படையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நான்கு நாட்கள் காத்திருந்து... 2,000 மீற்றர் தொலைவில் இருந்து சம்பவம் செய்த உக்ரைன் வீரர் News Lankasri
