எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பொதுமக்களுக்கு பெரும் சிரமம்
அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள QR முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கட்டணம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் உள்ள சினொபெக், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் போன்ற நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்