பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்குவதாக வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.
குறைபாடு
பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரிகளினால் கைவிடப்பட்டும், கவனிப்பாரற்றும் இருக்கும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை உரிய வசதிகளுடன் மீள் இயங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் ஏறத்தாழ 12000 மக்களுக்கு சேவையாற்றி வரும் ஒரு பிரதேச வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.

120 கட்டில்கள் போடக் கூடிய நிலையில் இருந்தும் 85 கட்டில்களே இப்போது உள்ளன. 2009 வரைக்கும் இங்கே பிரசவங்கள் இடம்பெற்று வந்தன. இப்போது பிரசவ அறைகள் வசதியுடன் இருந்தும் மகப்பேற்று வைத்திய நிபுணர் - VOG ஒருவர் நிரந்தரமாக இல்லாததால் அங்கே பிரசவங்கள் இடம் பெறுவதில்லை.
அவசர மின் துண்டிப்பு சமயங்களில் பயன்படுத்துவதற்கு மின்பிறப்பாக்கி புதிதாக கொள்வனவு செய்யப்பட்டும் அதற்குரிய அறை சரியாக ஒழுங்கு செய்யப்படாததால் கடந்த மூன்று மாதமாக மின் தடைப்பட்டாலும் கூட நோயாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்க முடியாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இறுதியாக பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார், ஒவ்வொரு விடயமாக விளக்கமளித்த அவர், சில விடயங்கள் அரசின் கொள்கை முடிவு ஆக இருப்பதாகத் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri