ஜனாதிபதியிடம் சந்தசிறி தேரர் முன்வைத்த கோரிக்கைகள்-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது என இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண தொடம்பஹல சந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன விகாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமரபுர மகா நிகாயவின் மகாதலைவரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதன்போது, விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய தேரர், திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குதல் மற்றும் எதிர்கால உலகை வெல்லக்கூடிய பொருத்தமான பாடங்களை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,