பொலிஸ்மா அதிபரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சி சார்பில் எழுத்துமூலமான கோரிக்கை ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
பாதாள உலகக்கும்பல்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழுவின் முன்பாக
இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் மாஅதிபர் பொறுப்பற்ற வகையில் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.
எனவே அவரை நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியின் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam