மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிபரை அதே பாடசாலையில் மீள பணியமர்த்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் (Photos)
கொட்டகலை-பத்தனை,போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் இன்று (03.10.2022) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள், போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் அதே பாடசாலையில் மீள பணியமர்த்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பொய்யான குற்றச்சாட்டு

பாடசாலைக்கு முன்பாக தலவாக்கலை - நாவலப்பிட்டிய பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதனை வழங்க மறுத்த மாணவியொருவரை தாக்கினார் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரிகளிடம் கோரிக்கை

எனவே, இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுத்து, தமது பாடசாலை முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதேவேளை, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோசங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தினை சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam