மேய்ச்சல் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை: தவறான காணொளிகளை வெளியிடுவோருக்கு கண்டனம்

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kumar Oct 09, 2026 07:15 AM GMT
Report

மயிலத்தமடு - மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேற்றி அங்கு அத்துமீறிய விவசாயிகளுக்கு இடமளிக்கும் வகையில் பொலிஸாரும் மகாவலியும் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி தமது மேய்ச்சல் தரை காணிகளை தமக்கு பெற்றுத்தர ஜனாதிபதியும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில சிங்கள விவசாயிகள் போலியான வீடியோக்களை வெளியிட்டு கால்நடை பண்ணையாளர்களை பிழையாக சித்தரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று(09.10.2026) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேய்ச்சல் நிலங்களை கைப்பற்ற நடவடிக்கை

இந்த விடயம் தொடர்பில்,

மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் பேசுகையில்,

“ நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரையில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆறாம் மாதத்தில் இருந்து பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேய்ச்சல் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை: தவறான காணொளிகளை வெளியிடுவோருக்கு கண்டனம் | Demand To Release Grazing Lands

ஆறாம் மாதத்தில் இருந்து எங்களை வெளியேற்றி, பலதரப்புகளிடமும் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. எந்தத் தரப்பும் பயிர் செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டு, இறுதியில் மகாவலியால் அந்த நிலங்கள் வழங்கப்பட்டு, எங்களைக் காட்டில் மாடுகளைக் கட்டுமாறு கூறுகிறார்கள்.

பண்ணையாளர்களாகிய எங்களுக்குத்தான் காட்டில் வாழும் வாழ்க்கை பற்றித் தெரியும், அவர்களுக்கு அது தெரியாது. எங்களாலும் எங்கள் கால்நடைகளாலும் காட்டில் வாழ முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரைச் சந்தித்து நிலைமைகளைக் விளக்கியபோதும், காட்டில் மாடுகளைக் கட்ட முடியாது என்பதையும், எல்லைப் பகுதிகளில் மாடுகளை மேய்க்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

15 வருடங்களாகக் கஷ்டப்பட்டு, அடிகளையும் அவமானங்களையும் சந்தித்து வாழும் எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜனாதிபதியாலும் விவசாய அமைப்பினராலும் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு - மாதவனை நிலத்தை எமக்கு மீண்டும் பெற்றுத்தர வேண்டும். எங்களால் காட்டில் சென்று வாழ முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் எந்தச் சிங்களச் சகோதரர்களுடனும் முரண்படவில்லை.

மேய்ச்சல் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை: தவறான காணொளிகளை வெளியிடுவோருக்கு கண்டனம் | Demand To Release Grazing Lands

இந்த முரண்பாடுகளை உருவாக்க அமைப்புகளும் பொலிஸாரும் தான் காரணம். பொலிஸார் தினமும் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள், நேற்று இரவு மற்றும் இன்று காலையிலும் பொலிஸ் தரப்பிலிருந்து அழைப்பு மேற்கொண்டு எங்களை வெளியேறுமாறு கூறினார்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சில காணொளிகள் தவறானவை. பயிர்களை அழிப்பதாகக் கூறப்படும் காணொளிகள் மயிலத்தமடு பகுதியில் எடுக்கப்பட்டவை அல்ல, அவை அம்பாறை மாவட்டத்தின் திவில்பத்தான பகுதியில் எடுக்கப்பட்டவை. தவறான காணொளிகளைப் பரப்பி தமிழ் பண்ணையாளர்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

தயவுசெய்து ஜனாதிபதி, சிவில் சமூகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தலையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எமது மேய்ச்சல் தரையை எமக்கு மீட்டுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.   

களுத்துறையில் இன்று காலை துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

களுத்துறையில் இன்று காலை துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

விமான சேவைகள் நிறுத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

விமான சேவைகள் நிறுத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US